ramnath ranilஇந்திய மற்றும் இலங்கைக்கு இடையிலான வரலாற்று ரீதியான தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டுசெல்வது முக்கியமானது என இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிமசிங்க, புதுடில்லியில் உள்ள ராஷ்ரபதிபவனில் அந்நாட்டு ஜனாதிபதியை நேற்று சந்தித்தார். இதன்போதே இந்திய ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய – இலங்கை பொருளாதார தொடர்புகளை பலப்படுத்தல் மற்றும் இரு தரப்பினரும் இணைந்து மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டங்களின் தாமதத்தை தவிர்த்தல் என்பன தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்துள்ளார். இந்திய நிதி உதவியின் கீழ் இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் வீடமைப்பு திட்டம் தொடர்பில் இதன்போது இருதரப்பினரும் கலந்துரையாடியதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பாதகமான இருதரப்பு கருத்துகள் குறித்தும், வலய அரசியல் மற்றும் சமூக முக்கியத்துவம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் உடனிருந்துள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.