மக்கள் விடுதலை முன்னணியினால் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் சபாநாயகரிடம் குறித்த நம்பிக்கையிலாப் பிரேரணணை கையளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தவிர்ந்த ஏனைய அனைத்து மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளதாகவும், பிமல் ரத்நாயக்க வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளதன் காரணமாக குறித்த பிரேரணையில் கையொப்பமிடவில்லையென தெரியவருகிறது.