manus islandபப்புவா நியூகினியாவின் மானுஸ் தீவில் தங்கியிருந்த புகழிடக் கோரிக்கையாளர்களை வெளியேற்றியுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மானுஸ் தீவில் தங்கியிருந்தவர்கள் மாற்று இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. 300 க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் அந்நாட்டு பொலிஸாரின் உதவியுடன் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.இந்தத் தீவில் தங்கியிருந்த புகலிடக் கோரிக்கையாளர்களில் அதிகளவானோர் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்ற சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்கள் பப்புவா நியூகினியாவின் நாவுரு மற்றும் மானஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இவர்களில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி முதல் அந்நாட்டிலுள்ள அகதி முகாம்களை மூடுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. மானஸ் தீவில் உள்ள குடிவரவு முகாம் அரசியலமைப்பிற்கு சட்டவிரோதமானது என பப்புவா நியூகினியா நீதிமன்றம் குறிப்பிட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.