எகிப்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 184 பேர் வரை பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள அல் ராவ்தா மசூதி அருகே நேற்று வாகனத்தில் வந்த 4 தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர்.
மேலும், துப்பாக்கி மூலம் மசூதிக்கு வெளியே இருந்தவர்களை குறிவைத்து சரமாரியாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் இதுவரை 184 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது. நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளதாக எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொழுகைக்காக மசூதிக்கு வந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. எனினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.