ரொபர்ட் முகாபே பதவி விலயதை அடுத்து சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக எமர்சன் மனங்காக்வா நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். தலைநகர் ஹராரேயில் நடைபெற்ற நிகழ்வில் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 37 வருடங்களாக ஆட்சியிலிருந்த ரொபர்ட் முகாபே அண்மையில் பதவி விலகியதை அடுத்து துணை ஜனாதிபதியாக இருந்த எமர்சன் பதவியேற்றார். ஷோனு பி.எப் கட்சியைச் சார்ந்த துணை ஜனாதிபதி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததன் காரணமாக ரொபட் முகாபே மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. பின்னர் ராணுவம் பலவந்தமாக ஆட்சியை கைப்பற்றி ரொபர்ட் முகாபெவை பதவி விலகுமாறு பணித்தது.
எனினும் தன்னால் பதவி விலகு முடியாது என அவர் மறுப்பு வெளியிட்டு வந்தார். பின்னர் அழுத்தங்களுக்கு மத்தியிலேயே அவர் தனது பதவி விலகலை அறிவித்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பதவியிலிருந்து விலகினார். பின்னர் புதிய ஜனாதிபதியாக எமர்சன் தெரிவு செய்யப்பட்டு நேற்று (24) பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.