முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணீரூற்று பகுதியில் யமஹா (YAMAHA) காட்சியகம் நேற்று வெள்ளிக்கிழமை (24.11.2017) திறந்து வைக்கப்பட்டது.
வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் க.சிவநேசன் அவர்களால் நேற்று முற்பகல் 10.30மணியளவில் மேற்படி காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் யமஹா நிறுவன நிர்வாகிகள், முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி ஆணையாளர், பிரதேச பொலிஸ் அதிகாரிகள், வர்த்தகப் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.