வட மாகாண மீன்பிடியை அபிவிருத்தி செய்யும் முகமாக வடமாகாண நிதியுதவியின் மூலம் முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் மீன்குஞ்சு விடும் நிகழ்வு நேற்றையதினம் (24.11.2017) இடம்பெற்றது.
நேற்று முற்பகல் 11.30அளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் க.சிவநேசன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். இதன்போது கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களின் அழகிய வீடு என்ற மீனவர்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக மீனவ சமூகத்தைச் சேர்ந்த இருபது பேருக்கு தலா 50ஆயிரம் ரூபா காசோலை வழங்கப்பட்டதோடு, மீனவர்களுக்கான காப்புறுதியும் வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் மாகாண நீர்வள முகாமைத்துவ பணிப்பாளர், உத்தியோகத்தர்கள், மாவட்ட உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள்; மற்றும் பிரதேச செயலகத்தின் நிர்வாக சபை உத்தியோகத்தர், ஊர்ப் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.