Header image alt text

sfdfdfdfயாழ்ப்பாணம் காக்கை தீவு பகுதியில் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. பத்து T56- துப்பாக்கிகளும், 3 கைக்குண்டுகளும், 100க்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் உக்கிய நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுக் காலை நடைபெற்ற இந்த ஆயத மீட்புப் பணியில் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிசார் ஈடுபட்டிருந்தனர். மாவீரர் வார காலப்பகுதியில் குறித்த மீட்பு நடவடிக்கை இடம்பெற்றதால் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

arrest (2)சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பாலாவி பகுதியில் உள்ள விடுதியொன்றிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

புதுகுடியிருப்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளத்திலுள்ள முகவர் ஒருவரிடம் பணம் செலுத்தி அவுஸ்திரேலியா செல்ல சந்தேகநபர்கள் முயற்சித்துள்ளனர். Read more

NIC-Smart-Sri-lnka-newsfirst-626x380உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு, அதனை வழங்குவதற்கு விசேட பிரிவுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் தேர்தலின்போது தேசிய அடையாள அட்டை இல்லாமை காரணமாக 3 லட்சம் பேருக்கு வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக்க அண்மையில் தெரிவித்திருந்தார். தங்களது வசிப்பிடத்தை உறுதிப்படுத்த தேவையான உத்தியோகப்பூர்வ ஆவணங்கள் இல்லாதமை காரணமாக 3 லட்சம் பேர் வரை நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. Read more

sfdddfdபாடசாலை மாணவர்களுக்கு ஏற்படும் முதுகு வளைவு நோயைத் தடுப்பதற்காக புதிய பாடசாலை புத்தகப் பை ஒன்றை அடுத்த வருடம் முதல் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் கொண்டு செல்லும் பைகளில் அதிகம் பாரம் காரணமாக அதிகமான மாணவர்களின் இந்த நோய் ஏற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாகவே விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரைக்கமைய இந்தப் புதிய பாடசாலை பைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். Read more