arrest (2)சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பாலாவி பகுதியில் உள்ள விடுதியொன்றிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

புதுகுடியிருப்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளத்திலுள்ள முகவர் ஒருவரிடம் பணம் செலுத்தி அவுஸ்திரேலியா செல்ல சந்தேகநபர்கள் முயற்சித்துள்ளனர். 18 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்களே கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.