NIC-Smart-Sri-lnka-newsfirst-626x380உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு, அதனை வழங்குவதற்கு விசேட பிரிவுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் தேர்தலின்போது தேசிய அடையாள அட்டை இல்லாமை காரணமாக 3 லட்சம் பேருக்கு வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக்க அண்மையில் தெரிவித்திருந்தார். தங்களது வசிப்பிடத்தை உறுதிப்படுத்த தேவையான உத்தியோகப்பூர்வ ஆவணங்கள் இல்லாதமை காரணமாக 3 லட்சம் பேர் வரை நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு, தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு விசேட பிரிவுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி தேர்தல் பட்டியலில் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ள நபர்கள் மற்றும் கிராம சேவை அதிகாரிகளின் மூலம் தங்களது வசிப்பிடத்தை உறுதி செய்யக்கூடிய நபர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் வீ. குணத்திலக்க மேலும் தெரிவித்தார். இலங்கை தேர்தல் சட்டங்களின் படி தேர்தல்களின் போது வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டைகளை சமர்ப்பிப்பது அத்தியாவசியமானது.