யாழ்ப்பாணம் – சாவகச்சேரி – ஏ9 வீதி – நுணாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 09.15 அளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பஸ்ஸ_ம் மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில், நுணாவில் மேற்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தையா மோகன்ராஜ் (30), நுணாவில் மத்தியைச் சேர்ந்த யோகராசா சபேஸ்குமார் (26) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். மேலும், இதனுடன் தொடர்புடைய பஸ் சாரதியைச் சாவகச்சேரிப் பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.