maththalaமத்­தல விமான நிலைய அபி­வி­ருத்தி உள்­ளிட்ட இந்­தி­யா­வுடன் இணைந்து இல ங்கை மேற்­கொள்ளும் கூட்டு முயற்சி திட்­டங்­க­ளுக்கு சீனா முழு­மை­யான ஒப்­பு­தலை வழங்­கி­யுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன தெரி­வித்தார்.

சீனா­வுக்கு அண்­மையில் மேற்­கொண்­டி­ருந்த உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் தொடர்­பாக ஊடகம் ஒன்­றுக்கு விளக்­க­ம­ளித்த போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். “மூலோ­பாய முக்­கி­யத்­துவம் வாய்ந்த மத்­தல விமானநிலைய அபி­வி­ருத்தித் திட்டம், திரு­கோ­ண­மலை எண்ணெய்க் குதம் அபி­வி­ருத்தித் திட்டம் உள்­ளிட்ட இந்­தி­யா­வு­ட­னான கூட்டு முயற்சித் திட்­டங்­க­ளுக்கு சீனா முழு­மை­யான ஒப்­பு­தலை வழங்­கி­யுள்­ளது. சீனா, இந்­தி­யா­வுடன் இலங்­கைக்கு சுமு­க­மான நட்­பு­றவு உள்ள நிலையில், சில அர­சியல் சக்­திகள் தவ­றாக வழி­ந­டத்த முயற்­சிப்­பது வருத்­த­மா­கவும், அநா­க­ரி­க­மா­கவும் உள்­ளது. தவ­றான குற்­றச்­சாட்­டு­க்களை சுமத்தி, இலங்கை மற்றும் இரண்டு நட்பு நாடு­க­ளுக்கும் இடையில் பிள­வு­களை ஏற்­ப­டுத்­து­வதே அவர்­களின் நோக்கம்.

இரண்டு நாடு­க­ளு­டனும், இலங்கை சுமு­க­மான நெருங்­கிய கலா­சார, மத, வர்த்­தக உற­வு­களைக் கொண்­டி­ருக்­கி­றது என்­பதை சீனா­வுக்கு நான் தெளி­வாக எடுத்துக் கூறி­யுள்ளேன். பரஸ்­பரம் அனை­வ­ருக்கும் நன்­மை­ய­ளிக்கும் வகையில், இந்த நட்­பு­றவு முன்­னே ற்­றப்­பட வேண்­டி­யது முக்கியமானது என்றும் சீனாவுக்கு எடுத்துக் கூறினேன். இந்த உணர்வுகளை சீனா முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள் ளார்.