ஒ-1வவுனியா கணேசபுரத்தில் சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கு நீதிகோரி இன்று கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.

வவுனியா பொலிஸ் நிலைய முன்றலில் ஆரம்பமான பேரணி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்க வேண்டும் மற்றும் ஆண்களும் இது தொடர்பில் தமது பங்களிப்பை வழங்க வேண்டுமென குறித்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. வடமாகாண பெண்கள் அபிவிருத்தி நிலையமும் வடக்கு பெண்கள் பாராளுமன்றம் என்ற அமைப்பும் இணைந்து இந்த கண்டனப் பேரணியை நடத்தின. கணேசபுரத்தில் கடந்த 14 ஆம் திகதி 16 வயது சிறுமி கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டதுடன் மற்றுமொரு சந்தேகநபரை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குற்றமிழைத்தவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமென கண்டனப் பேரணியில் ஈடுப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.