புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து யாழ். தெல்லிப்பழையிலுள்ள யா/தந்தை செல்வா தொடக்க நிலைப்பள்ளிக்கு ஒரு தொகுதி கதிரைகளை வழங்கிவைத்துள்ளார்.
பாடசாலையின் அதிபர் திரு. வாமதேவன் அவர்களின் தலைமையில் நேற்றுக்காலை 10மணியளவில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்களும் ஆசிரியைகளும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். Read more