நாட்டை பிளவடையச் செய்யாத அரசியல் தீர்வின் ஊடாக நாட்டை அபிவிருத்தி செய்யும் வகையில், அனைத்து சமுகங்களுக்கு இடையிலும் நம்பிக்கையையும், சகோதாரத்துவத்தையும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தென்கொரியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்குள்ள இலங்கையர்களை சந்தித்து உரையாற்றிய போது இந்த விடயத்தைக் கூறியுள்ளார். சமஸ்டி அடிப்படையில் தீர்வினை வழங்குவதற்கு நாம் தயாராக இல்லை. அத்துடன் இராணுவத்தையோ, தேசியப் பாதுகாப்பையோ பலவீனப்படுத்தும் நோக்கில் நாட்டைப் பொறுப்பேற்கவில்லை என்றும் கூறினார்.