நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை. இயற்கை அனர்த்தம் காரணமாக 5பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இது தவிர, 20 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10,000 ரூபாவை வழங்குமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இன்றையதினம் தொடக்கம் இந்தத் தொகையினை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் தேசிய காப்புறுதி நிதியத்துக்கும் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அனர்த்தங்களினால் சொத்துக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பினை மதிப்பீடு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் பிரதமர் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.