courtsஉள்ளூராட்சி மற்ற தேர்தல் வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விலக்கிக்கொள்ள சட்டத்தரணிகள் முன்வைத்திருந்த கோரிக்கைகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.

அதன்படி , இந்த வர்த்தமானி அறிவித்தலை தடுத்து டிசம்பர் 4ம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையில் வெளியிடப்பட்ட இடைக்கால தடையுத்தரவை ரத்துச் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான எல்.டீ.பீ. தெஹிதெனிண, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் டிரான் குணரத்த ஆகிய மூவரடங்கிய நீதிபதி குழுவினர் உத்தரவிட்டுள்ளனர். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தாவுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய இந்த மனுவை விலக்கிக்கொள்ள அனுமதியளிக்குமாறு மனுதாரர்களின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, குறித்த மனுவை விலக்கிக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றையதினம் அனுமதியளித்துள்ளது.