யாழ். நீர்வேலி கரந்தன் கலைவாணி சனசமூக நிலைய காணி அன்பளிப்பு செய்தவர் நினைவுக்கல் தரைநீக்கமும், புனரமைப்பு செய்யப்பட்ட சனசமூக நிலைய கட்டிட திறப்பு விழாவும் (29.11.2017) புதன்கிழமை மாலை 6.45அளவில் கலைவாணி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. சுந்தரமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் விருந்தினர்களாக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கேற்றல் இடம்பெற்று பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் சனசமூக நிலைய கட்டிடத்தை திறந்துவைத்ததோடு, அமரர் சின்னப்பு ராசையா அவர்களின் நினைவுக்கல்லையும் திரைநீக்கம் செய்தார். தொடர்ந்து விசேட கலந்துரையாடலும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சனசமூக நிலையத் தலைவர், நிர்வாக சபையினர், அங்கத்தவர்கள், கரந்தன் கிராம சேவையாளர் மற்றும் முன்னாள் கிராம சேவையாளர் ஞானசபேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.