யாழ்ப்பாண குடாநாட்டில், படையினரின் வசம் இருந்த மேலும் ஒரு தொகுதி பொதுமக்களுக்குச் சொந்தமான காணி, இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. காணி விடுவிப்பின் 16ஆவது கட்டமாக, யாழ்., வலி வடக்கு, வயாவிளான், வடமூலை பகுதியில் இதுவரை காலமும் படையினரின் வசம் இருந்த 29 ஏக்கர் காணியே, இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வசாவிளான் உத்தரியமாதா ஆலய முன்றலில் இன்று (நடைபெற்ற நிகழ்வில், காணிகளை விடுவித்ததற்கான உறுதிச்சான்றிதளை, யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சி, யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகனிடம் கையளித்துள்ளார்.