உலக மீனவர் தினம் மன்னாரில் 28.11.2017 இல் நடைபெற்றது. இதில் மாகாண விவசாய அமைச்சர் கௌரவ க.சிவநேசன், Fr. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களின் பிரதிநிதியான அப்போஸ்தலர் பரிபாலகர் Fr. விக்டர் சூசை, தேசிய மீனவர் ஓத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சமன் குமார, செயலாளர் பிரதீப் வைஸ்,
தெற்கு மீனவ அமைப்பு(மாத்தறை), மீனவ பெண்கள் சம்மேளனம் திருமதி நெலுக்கா வீரக்கொடி (காலி), சஜெவ ஸாமிர, தேசிய மீனவ தொழில் சங்கம், சிவில் அமைப்புகள், அரசசார்பற்ற நிறுவனங்கள், பிரஜைகள் குழு போன்றவர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்த நிகழ்வின்போது விவசாய அமைச்சர் க.சிவநேசன் அவர்களிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது. இதன்போது சமூக ஒத்துழைப்புடன் எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுக்க முயல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.