Header image alt text

svxvcகிழக்கு மாகாண சபையினால் வழங்கப்பட்ட பட்டதாரிகள் ஆசிரியர் நியமனத்தில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் நியமன விண்ணப்ப அறிவுறுத்தலுக்கு மாறாக நியமனம் வழங்கப்பட்டதை கண்டித்தும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றுகாலை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஒன்றுகூடிய மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். 40 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் நியமனம் வழங்கு, எங்கள் கண்ணீருக்கு நீதிவேண்டும், அரசியல்வாதிகளே சிந்தியுங்கள், இன்று நாங்கள் தெருவில் நாளை நீங்கள் தெருவில், பரீட்சையிலும் சித்தி, நேர்முக தேர்விலும் சித்தி ஏன் நாங்கள் இன்னும் வீதி ஓரத்தில் போன்ற சுலோகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read more

lanka pakistanஇலங்கை – பாகிஸ்தான் நட்புறவு, வர்த்தக மற்றும் முதலீட்டு சங்கத்தின் பிரதிநிகள் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத்தை பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் இன்று சந்தித்துள்ளனர்.

கடந்த 1950 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை – பாகிஸ்தான் நட்புறவு, வர்த்தக மற்றும் முதலீட்டு சங்கமானது, இலங்கையின் பழைமையான சங்கங்களிலுள் ஒன்றாகும். இச்சங்கம் இலங்கை மற்றும் பாகிஸ்தானிற்கிடையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான பயனுள்ள அமைப்பாக தன்னை நிலைநிறுத்தியிருக்கின்றது. Read more

nominationவடக்கில் உள்ளூராட்சிசபை தேர்தல் இடம்பெறவுள்ள ஒரே ஒரு நகரசபையான சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இக்கட்டுப்பணம் இன்றையதினம் செலுத்தப்பட்டுள்ளது. இருபத்தொரு உறுப்பினர்களைக் கொண்ட யாழ் சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிட விண்ணப்பங்கள் யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ளது. Read more

studentஅரசாங்க பாடசாலைகளில் உள்வாங்கப்படும் அனைத்து மாணவர்களினதும் அடையாளத்தை உரிய முறையில் உறுதி செய்யவும், பரீட்சை நடவடிக்கையின் போது, பரிட்சார்த்திகள் சார்ந்த விடயங்களை அதிகாரிகள் இலகுவாக அறிந்து கொள்வதற்காகவும், புதிய நடைமுறையொன்று முன்மொழியப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆலோசனைகளை முன்வைக்க, புத்தி ஜீவிகளை கொண்ட குழுவொன்றை, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நியமித்திருந்தார். இந்த குழுவினராலேயே, குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. Read more

ஒ-1வவுனியா கணேசபுரத்தில் சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கு நீதிகோரி இன்று கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.

வவுனியா பொலிஸ் நிலைய முன்றலில் ஆரம்பமான பேரணி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்க வேண்டும் மற்றும் ஆண்களும் இது தொடர்பில் தமது பங்களிப்பை வழங்க வேண்டுமென குறித்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. Read more

anil jayasingaவைத்தியர் அனில் ஜெயசிங்க புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, எதிர்வரும் புதன்கிழமை, தான் பதவியை பொறுப்பேற்கவுள்ளதாக, அனில் ஜெயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

shootingதிருகோணமலையில் பொலிஸ் கெப் வாகனத்தை மோதி விட்டு, நிறுத்தாமல் சென்ற இராணுவ கெப் வாகனத்தின் மீது நேற்றிரவு 8.10அளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருகோணமலை 10ம் கட்டைப் பகுதியில் பொலிஸ் கெப் வாகனத்துடன் மோதிய வாகனம் ஒன்று நிறுத்தாமல் செல்வதாக, ரொட்டவௌ பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த வாகனத்தை ரொட்டவௌ பொலிஸ் நிலையத்துக்கு முன்னால், மறித்த வேளை, அங்கும் நிறுத்தாமல் செல்ல முற்பட்டுள்ளனர். எனவே குறித்த கெப் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மொறவௌ பொலிஸார் தெரிவித்தனர். Read more

accidentயாழ்ப்பாணம் – சாவகச்சேரி – ஏ9 வீதி – நுணாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 09.15 அளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பஸ்ஸ_ம் மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில், நுணாவில் மேற்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தையா மோகன்ராஜ் (30), நுணாவில் மத்தியைச் சேர்ந்த யோகராசா சபேஸ்குமார் (26) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். Read more

maththalaமத்­தல விமான நிலைய அபி­வி­ருத்தி உள்­ளிட்ட இந்­தி­யா­வுடன் இணைந்து இல ங்கை மேற்­கொள்ளும் கூட்டு முயற்சி திட்­டங்­க­ளுக்கு சீனா முழு­மை­யான ஒப்­பு­தலை வழங்­கி­யுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன தெரி­வித்தார்.

சீனா­வுக்கு அண்­மையில் மேற்­கொண்­டி­ருந்த உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் தொடர்­பாக ஊடகம் ஒன்­றுக்கு விளக்­க­ம­ளித்த போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். “மூலோ­பாய முக்­கி­யத்­துவம் வாய்ந்த மத்­தல விமானநிலைய அபி­வி­ருத்தித் திட்டம், திரு­கோ­ண­மலை எண்ணெய்க் குதம் அபி­வி­ருத்தித் திட்டம் உள்­ளிட்ட இந்­தி­யா­வு­ட­னான கூட்டு முயற்சித் திட்­டங்­க­ளுக்கு சீனா முழு­மை­யான ஒப்­பு­தலை வழங்­கி­யுள்­ளது. Read more

sfdfdfdfயாழ்ப்பாணம் காக்கை தீவு பகுதியில் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. பத்து T56- துப்பாக்கிகளும், 3 கைக்குண்டுகளும், 100க்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் உக்கிய நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுக் காலை நடைபெற்ற இந்த ஆயத மீட்புப் பணியில் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிசார் ஈடுபட்டிருந்தனர். மாவீரர் வார காலப்பகுதியில் குறித்த மீட்பு நடவடிக்கை இடம்பெற்றதால் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.