Header image alt text

sddfdசீரற்ற வானிலை காரணமாக 55,855 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 மாவட்டங்களில் 14 ,617 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக 8 பேர் காணாமற்போயுள்ளனர். இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் 7 பேர் சீரற்ற வானிலையால் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பதுளை மற்றும் பண்டாரவளையைச் சேர்ந்த 02 பேரும், ஹிக்கடுவ மற்றும் அம்பலங்கொட பகுதிகளைச் சேர்ந்த 4 பேரும் கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. Read more

election meetநாட்டின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

208 உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்களை கோரும் அறிவித்தலை எதிர்வரும் 4ஆம் திகதி அல்லது 5ஆம் திகதி வெளியிடுவதற்கு வாய்ப்புள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். எம். மொஹமட் குறிப்பிட்டுள்ளார். 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் கடந்த 27 ஆம் திகதி ஆரம்பமாகின. Read more

gffgfபடகு மூலமாக நியுசிலாந்து நோக்கி பயணிக்க முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 32 பேரும், எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிலாபம் மேலதிக நீதவான் இந்ந உத்தரவை பிறப்பித்துள்ளார். உடப்புவ பிரதேசத்தில் இருந்து நியுசிலாந்து நோக்கி பயணிக்க முற்பட்டுள்ள குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

britishபிரித்தானிய அரசாங்கம் புதிதாக எந்த ஒரு இலங்கை ஏதிலியின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. பிரித்தானியாவில் மொத்தமாக 3 ஆயிரத்து 535 ஏதிலிகள் விண்ணப்பித்தநிலையில், அவர்களில் 838 ஏதிலிகளின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. Read more