gffgfபடகு மூலமாக நியுசிலாந்து நோக்கி பயணிக்க முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 32 பேரும், எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிலாபம் மேலதிக நீதவான் இந்ந உத்தரவை பிறப்பித்துள்ளார். உடப்புவ பிரதேசத்தில் இருந்து நியுசிலாந்து நோக்கி பயணிக்க முற்பட்டுள்ள குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சுகயீனம் காரணமாக ஆனவிலுந்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிலாபம் காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.