Header image alt text

IMG_3602 - Copyவவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் கலை விழாவும் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று (01.12.2017) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு கலைமகள் முன்பள்ளியில் முன்பள்ளியின் முகாமைத்துவக்குழு தலைவர் திரு.ப.ரவிசங்கர் அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவின் விருந்தினர்களாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் திரு செந்தில்நாதன் மயூரன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட பொறுப்பாளருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), Read more

sdffdfdவடமாகாண வேலையற்றபட்டதாரிகள் சமூகத்தினால் வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் இன்று காலை மணியளவில் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.

மத்திய பேருந்து நிலையத்தில் ஒன்றிணைந்த பட்டதாரிகள் “நல்லாட்சி அரசே நாடகமாடாதே”, “கொடு கொடு வேலையைக்கொடு”, “எமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை”, “இது வரை காலமும் நாம் ஏமாற்றப்பட்டதுபோதும் இனியும் ஏமாறத் தயாரில்லை”, Read more

sfdfdfமன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதி குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போய் சுமார் 37 நாட்களை கடந்த நிலையில் நேற்று மாலை மடு காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சன் நீக்கிலாஸ் (வயது-56) என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆண்டாங்குளம் சந்தியில் முடி திருத்தகத்தை (சலூன்) நடத்திவரும் குறித்த குடும்பஸ்தர் கடந்த 25-10-2017 அன்றுமாலை 4 மணியளவில் காணாமல் போனதாக அவரது மனைவி அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். Read more

sfdfdமட்டக்களப்பு நாவலடியில் இன்றுகாலை கரைவலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள் சிக்கியிருந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய கஷ்டத்துக்கு மத்தியில் தங்களது வாழ்கையினை கொண்டு செல்கின்ற நிலையில் இன்று இவ்வாறு வலையில் பாம்புகள் சிக்கியுள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், காலநிலை மாற்றங்கள் ஏற்பட சாத்தியக் கூறுகள் உள்ளதாவென மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. Read more

851276761fishing-shipநாட்டின் மேற்குத் திசையில், அரபிக் கடலில் நிலவும் ஒக்கி சூறாவளி கொழும்பிலிருந்து 850 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அது தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறிவருவதால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறைவடையும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

sadfசீரற்ற காலநிலை காலநிலை காரணமாக அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 5 காணாமல் போய் இருப்பதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 56 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.

மீட்டியாகொட மற்றும் அம்பலன்கொட கடற்கரை பகுதியில் மீனவர்கள் நான்கு பேரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. மீட்டியாகொட தெல்வத்தை பகுதியை சேர்ந்த 55 மற்றும் 58 வயதுகளைச் சேர்ந்த இருவரின் சடலங்கள் அவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. Read more