851276761fishing-shipநாட்டின் மேற்குத் திசையில், அரபிக் கடலில் நிலவும் ஒக்கி சூறாவளி கொழும்பிலிருந்து 850 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அது தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறிவருவதால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறைவடையும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.