Header image alt text

zzzz copyதேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஒதுக்குகின்ற நிதியின்கீழ் Youth with Talent மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் நாடாளாவிய ரீதியில் இளைஞர் கழகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

வவுனியா மாவட்டத்தில் 22 அபிவிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் வவுனியா வெங்கலச் செட்டிகுளம் செயலக பிரிவில் அமைந்துள்ள இலுப்பைக்குளம் சென் மேரீஸ் இளைஞர் கழகம் ஊடாக வஃஅடைக்கல அன்னை வித்தியாலயத்தின் சுற்று மதில் மற்றும் நுழைவாயில் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. Read more

zzzzzz copy1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 02 ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் சேமமடு முதலாம் படிவத்தில் இராணுவத்தினரால் விசாரணைக்கென அழைத்துச்செல்லப்பட்ட 22 பொதுமக்களும் காணாமல் போனதன் 33ஆம் ஆண்டு நினைவு ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு நேற்று (02.12.2017) சேமமடு முதலாம் படிவ ஆதி விநாயகர் ஆலயத்தில் சேமமடு உறவுகளினால் அனுஷ்ட்டிக்கப்பட்டது.

இவ் விசேட ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர். Read more

zzzz copyவவுனியா வாணி அருணோதயா முன்பள்ளியின் 7ம் ஆண்டு கலை நிகழ்வுகள் திரு. எஸ். தயாளன் தலைமையில் 04.11.2017 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா நகரசபை மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் திரு ந. சிவசக்தி ஆனந்தன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக சிறி ரெலோ அமைப்பின் தலைவர் திரு. பா.உதயராசா முன்னால் வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. செந்தில்நாதன் மயூரன், நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவாகிய திரு.க.சந்திரகுலசிங்கம்(மோகன்), Read more

sri lanka europen unionஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையில் முதலீடுகள் மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலான நான்காவது கலந்துரையாடல், கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பிரித்தானியா உட்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கலந்துரையாடலின்போது, இலங்கையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பாக தீவிரமாக கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more

201486820land-slide-in-sri-lankaஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை, தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதென, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், இன்று காலை 9.30 மணிமுதல் நாளை காலை 9.30 வரை, இந்த மண்சரிவு எச்சரிக்கைக்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளதென நிறுவகம் கூறியுள்ளது. இரத்தினபுரி மாவட்டம் கொலன்ன, அயகம, பலாங்கொடை, கஹாவத்தை, குருவிட்ட இம்புல்பே, எஹெலியகொட, வெலிகேபொலம பிரதேச செயலாளர் பிரிவு உட்பட அதனை அண்டிய பகுதிகள், Read more

20171202_182055ஸ்கந்தா நிதியத்தின் (Skanda Foundation) அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (02.12.2017) சனிக்கிழமை மாலை 5.30மணியளவில் கொழும்பு பம்பலப்பிட்டி அரச மாடிவீட்டு தொகுதியில் அமைந்துள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மேல் மாகாண ஆளுநர் திரு. லோகேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கேற்றல், தேவாரம், தமிழ்த் தாய் வாழ்த்து இடம்பெற்றன. தொடர்ந்து ஸ்கந்தா நிதியத்தின் இயக்குநர் Dr. சிவகுமார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். Read more

chandrikaநாட்டிற்கு புதிய அரசியல் அமைப்பொன்று அத்தியவசியம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு புதிய அரசாங்கத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், புதிய அரசியல் அமைப்பின் தேவைப்பாடு குறித்து பல கருத்துக்களை முன்வைத்திருந்தனர். Read more

election meetதடை நீக்கப்பட்ட 208 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக் கோரலை, டிசம்பர் மாதம் 18ம் திகதி முதல் 21ம் திகதி வரை நடத்தவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் நாளை அறிவிக்கவுள்ளதாக, அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். முன்னதாக, 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக் கோரல் டிசம்பர் மாதம் 11ம் திகதி முதல் 14ம் திகதி நண்பகல் வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. Read more

image_ee2a8a45d9முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட இளைஞர்கள் சிலர் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் கீழ் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும் என நம்பிக்கையுடன் இவர்கள் இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளதாக வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. Read more