ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை, தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதென, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், இன்று காலை 9.30 மணிமுதல் நாளை காலை 9.30 வரை, இந்த மண்சரிவு எச்சரிக்கைக்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளதென நிறுவகம் கூறியுள்ளது. இரத்தினபுரி மாவட்டம் கொலன்ன, அயகம, பலாங்கொடை, கஹாவத்தை, குருவிட்ட இம்புல்பே, எஹெலியகொட, வெலிகேபொலம பிரதேச செயலாளர் பிரிவு உட்பட அதனை அண்டிய பகுதிகள், காலி மாவட்டம் பத்தேகம, எல்பிட்டிய, யக்கலமுல்ல மற்றும் நாகொட பிரதேச செயலாளர் பிரிவு உட்பட அதனை அண்டிய பகுதிகள், பதுளை மாவட்டம் ஹல்துமுல்லை மற்றும் பசறை பிரதேச செயலாளர் பிரிவு உட்பட அதனை அண்டிய பகுதிகள்,
ஹம்பாந்தோட்டை மாவட்டம் கட்டுவன மற்றும் ஒக்கேவல பிரதேச செயலாளர் பிரிவு உட்பட அதனை அண்டிய பகுதிகள், களுத்துறை மாவட்டம் பாலிந்தநுவர, புலத்சிங்கள, இங்கிரிய மற்றும் அகலவத்த பிரதேச செயலாளர் பிரிவு உட்பட அதனை அண்டிய பகுதிகள்,
மாத்தறை மாவட்டம் பஸ்கொட, பிட்டபெத்தர மற்றும் கொட்டபொல பிரதேச செயலாளர் பிரிவு உட்பட அதனை அண்டிய பகுதிகள் என்பவற்றிலேயே எச்சரிக்கைக்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.