தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஒதுக்குகின்ற நிதியின்கீழ் Youth with Talent மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் நாடாளாவிய ரீதியில் இளைஞர் கழகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
வவுனியா மாவட்டத்தில் 22 அபிவிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் வவுனியா வெங்கலச் செட்டிகுளம் செயலக பிரிவில் அமைந்துள்ள இலுப்பைக்குளம் சென் மேரீஸ் இளைஞர் கழகம் ஊடாக வஃஅடைக்கல அன்னை வித்தியாலயத்தின் சுற்று மதில் மற்றும் நுழைவாயில் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இவ் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு ரி.திரேஷ்குமார் அவர்களுடன் வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் திரு சுனில் ஜெயமாஹா, இளைஞர் கழக மாவட்ட சம்மேளன தலைவர் திரு சு.காண்டீபன் ஆகியோர் நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தனர்.