நாட்டிற்கு புதிய அரசியல் அமைப்பொன்று அத்தியவசியம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு புதிய அரசாங்கத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், புதிய அரசியல் அமைப்பின் தேவைப்பாடு குறித்து பல கருத்துக்களை முன்வைத்திருந்தனர். இதற்கமையவே, புதிய அரசாங்கம் ஒன்றை மக்கள் உருவாக்கியிருந்தனர். எனவே, நாட்டில் வாழும் அனைவரிது உரிமைகளும் பாதுகாப்பதற்கு புதிய அரசியல் அமைப்பு அத்தியவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.