1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 02 ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் சேமமடு முதலாம் படிவத்தில் இராணுவத்தினரால் விசாரணைக்கென அழைத்துச்செல்லப்பட்ட 22 பொதுமக்களும் காணாமல் போனதன் 33ஆம் ஆண்டு நினைவு ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு நேற்று (02.12.2017) சேமமடு முதலாம் படிவ ஆதி விநாயகர் ஆலயத்தில் சேமமடு உறவுகளினால் அனுஷ்ட்டிக்கப்பட்டது.
இவ் விசேட ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.