தடை நீக்கப்பட்ட 208 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக் கோரலை, டிசம்பர் மாதம் 18ம் திகதி முதல் 21ம் திகதி வரை நடத்தவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் நாளை அறிவிக்கவுள்ளதாக, அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். முன்னதாக, 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக் கோரல் டிசம்பர் மாதம் 11ம் திகதி முதல் 14ம் திகதி நண்பகல் வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இவற்றிற்கான கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய, 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகளும் 13ம் திகதி நண்பகலுடன் நிறைவடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.