வவுனியா வேலன்குளம் கிராம சேவகர் பிரிவில் இளைஞர்களின் முயற்சியால் 07 கிராமங்களுக்காக இளைஞர்களால் மக்கள் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட பொதுமக்களுக்கான பொது நூல் நிலையத்தின் திறப்பு விழா நியூ லைன் இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மக்கள் பங்களிப்புடன், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஒதுக்குகின்ற நிதியின் கீழ் Youth with Talent மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் நாடாளாவிய ரீதியில் இளைஞர் கழகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. Read more