711094360mahinda-desa-Lஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். தேர்தல் நடைபெறும் தினம் ஞாயிறு அல்லது அரச விடுமுறையாக அல்லாத ஒரு தினத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார். 97 சபைகளில் இருந்த அச்சு பிழைகள் காரணமாக மீண்டும் குறித்த சபைகளை வர்த்தமானியில் உள்ளிட வேண்டிய நிலை ஏற்பட்டது.அவை கடந்த 2 ஆம் திகதி ஜனாதிபதியின் கையொப்பத்துடன் மீண்டும் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டன. அதன்படி இன்று வரை 248 உள்ளுராட்சி சபைகளில் வேட்பு மனுக்களை வெளியிடுவதற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என அவர் தெரிவித்தார். வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தேர்தலுக்கு 75 நாட்கள் உள்ள நிலையில் அந்த காலப்பகுதியில் பரீட்சைகளில் தோற்றுபவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயற்படுமாறும், வாகன பேரணி மற்றும் மக்கள் பேரணிகளை நடத்த அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.