IMG_3812 - Copyவவுனியா வேலன்குளம் கிராம சேவகர் பிரிவில் இளைஞர்களின் முயற்சியால் 07 கிராமங்களுக்காக இளைஞர்களால் மக்கள் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட பொதுமக்களுக்கான பொது நூல் நிலையத்தின் திறப்பு விழா நியூ லைன் இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மக்கள் பங்களிப்புடன், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஒதுக்குகின்ற நிதியின் கீழ் Youth with Talent மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் நாடாளாவிய ரீதியில் இளைஞர் கழகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. வவுனியா மாவட்டத்தில் 22 அபிவிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“கிராமங்கள் நோக்கிய கல்வி வளர்ச்சி” எனும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் இளைஞரணியின் செயற்றிட்டத்தின் ஊடான ஒரு பகுதி அனுசரணையில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி செயற்றிட்டத்தினை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் உப தலைவர்களில் ஒருவரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நூலகத்தினை திறந்து வைத்தார்.

இவ் நிகழ்வில் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் திரு சு.காண்டீபன், வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீ.கேசவன், நிஸ்கோ இணைப்பாளர் திரு ரி.அமுதராஜ், இளைஞர் சேவை அதிகாரி திரு ஸ்ரெனி ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_3793 IMG_3794 IMG_3795 IMG_3796 IMG_3801 IMG_3803 IMG_3806 IMG_3807 IMG_3812 IMG_3814 IMG_3820 IMG_3828 IMG_3831 IMG_3836