யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் சுரக்ஷா மாணவர் காப்பீட்டுத் திட்டத்தின் அறிமுக நிகழ்வானது 07.12.2017 வியாழக்கிழமை காலை 8மணியளவில் கல்லூரியின் அதிபர் திரு. வரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இந்நிகழ்வின்போது சுரக்ஷா காப்பீட்டுத் திட்டத்தின் பயன்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன், மாணவர் கௌரவிப்பும் இடம்பெற்றது. நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரிய, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டிருந்தார்கள்.