வவுனியா பூம்புகார் கல்மடு கிராமத்தில் சிலம்பொலி இளைஞர் கழகத்தின் இளைஞர்களால் நிர்மாணிக்கப்பட்ட அறநெறி பாடசாலையின் திறப்பு விழா அண்மையில் கழகத்தின் தலைவர் திரு லிங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் பங்களிப்புடன், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஒதுக்குகின்ற நிதியின் கீழ் லுழரவா றiவா வுயடநவெ மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் நாடாளாவிய ரீதியில் இளைஞர் கழகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. வவுனியா மாவட்டத்தில் 22 அபிவிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஈச்சங்குள பொலிஸ் பொறுப்பதிகாரி திரு ஆரியரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அறநெறி பாடசாலையினை திறந்து வைத்தார்கள்.

இவ் நிகழ்வில் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் திரு சு.காண்டீபன், வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீ.கேசவன், நிஸ்கோ இணைப்பாளர் திரு ரி.அமுதராஜ், இளைஞர் சேவை அதிகாரி திரு ஸ்ரெனி, கல்மடு பிரதேச உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தார்கள்.