சேவையாற்ற விரும்பும் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை இலங்கை ரயில்வே தலைமையகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே பொது முகாமையாளர் விஜய சமரசிங்க குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய ஓய்வு பெற்ற ரயில் எஞ்சின் சாரதிகள், ரயில் பாதுகாவலர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்டோருக்கே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.ரயில்வே சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களையும் கடமைக்கு சமூகமளிக்குமாறு ரயில்வே முகாமையாளரால் தெரியப்படுத்தப்பட்டது. இவ்வாறு சமூகமளிக்காதவர்கள் வேலையில் இருந்து நீங்கிச் சென்றதாக கருதப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த விடயத்தை கடந்த சனிக்கிழமை அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், ரயில் வேவைகளை மேலும் சிறப்பாக செயற்படுத்த ஒத்துழைக்க எண்ணும் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பணிக்கு வர விரும்பினால், ரயில்வே தலைமையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்