புதிய அரசியல் யாப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று அன்புக்கும் நட்புக்குமான வலய அமைப்பினரின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று (10.12.2017) வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதியோன்றில் நடைபெற்றது.
நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் நிரந்தரப் பெரும்பான்மையும், நிரந்தரமாக எண்ணிக்கையில் சிறுபான்மையிரும் இருக்கிற போது எண்ணிக்கையிலே சிறுபான்மையிராக நாடு பூராவும் இருப்பவர்கள் ஏதாவது ஒரு இடத்திலே பெரும்பான்மையிராக வாழ்ந்தால் பிராந்தியங்களுக்கு அரச அதிகாரங்களை பகி;ரந்து கொடுக்கும்போது சிறுபான்மையினரும் அதிகாரங்களை கையாளக்கூடியதாக இருக்கும்.
நாடு முழவதும் சிறுபான்மையிராக இருப்பவர்கள் பெரும்பான்மையிராக வாழ்வது வடக்கு கிழக்கிலேதான் அதனாலேதான் அதிகாரங்களை பிராந்தியங்களாக பகிருகின்றபோது ஒரு வழியிலே பிரச்சனைக்கு தீர்வு காணப்படக்கூடியதாக இருக்கின்றது.
ஆனால் நாட்டிலே மற்றைய பகுதிகளில் வாழ்கின்ற மலையக, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கு சமூதாய அவைகளை உருவாக்குவதன் ஊடாக அவர்களின் பிரச்சனையை தீர்க்க கூடியதாக இருக்கும்.
தமிழ் மக்களுக்காக மட்டுமல்ல மலையக மக்கள், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் நாங்கள் ஆதரவாகவே செயற்படுவோம், ஆனால் அவர்களுடைய பிரதிநிதிகளாக பேசுகிற உரித்து எங்களுக்கு கொடுக்கப்படவில்லை இந்நிலமைக்கு மக்கள் எங்களை தங்கள் பிரநிதியாக தெரிவு செய்யாமையே காரணாக இருக்கிறது.
ஒரு குறித்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு நான் எதிரானவன் ஒரு நாட்டினுடைய அரசியலமைப்பு சட்டம் மக்கள் அனைவரையும் சமமாக நடத்துவதாக இருந்தால் ஒரு குறித்த மதத்திற்கு மாத்திரம் முதன்மை ஸ்தானம் வழங்குவது தவறானது.
இடைக்கால அறிக்கையிலும் கையெழுத்திட்டு அதை கூறியிருக்கிறேன். அத்துடன் பாராளுமன்றத்திலும், அரசியலமைப்பு பேரவையிலும் நான் அதை சொல்லியிருக்கிறேன். ஒரு குறித்த சமயம் நடைமுறையில் இருப்பதற்கு அரச பாதுகாப்புதான் அவசியம் என்று கேட்டால் அதற்கு ஏன் மறுப்பு தெரிவிக்க வேண்டும்.
என்னுடைய சிந்தனையின்படி சமயங்கள் மேலானவைகள் ஒரு அரசாங்கத்தின் பாதுகாப்பிலேதான் ஒரு சமயம் தப்பி பிழைக்குமாக இருந்தால் அது உருப்படியான சமயமாக இருக்க முடியாது.
ஒரு அரசியலமைப்பு சட்டமானது நூற்றுக்கு நூறு எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க முடியாது. பாகுபாடற்ற ஒரு காப்புவாசகம் புதிய அரசியலமைப்பில் எழதப்படுமாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். இது குறித்த பல பௌத்த உயர்பீடங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம் அதற்கு அவர்கள் இணங்கியிருக்கிறார்கள் மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது ஒரு பௌத்த கோட்பாடு எனவே பெயரளவில் முதன்மை ஸ்தானத்தை பௌத்தத்திற்கு வழங்குங்கள் மற்ற மதங்களையும் பாகுபாடற்ற முறையில்பாதுகாப்பதற்கு இணங்குகிறோம் என தெரிவித்துள்ளார்கள்.
ஒரே நட்டுக்குள் நாடு பிரிபடாமல் இருக்க வேண்டும் என நாங்கள் சொல்வதற்கான காரணம் எங்களுடைய மக்கள் எங்களுக்கு அந்த அணையை வழங்கியுள்ளனர்.1977 ஆம் ஆண்டு மக்கள் ஒரு அணையை கொடுத்தார்கள் நாட்டை தரனியாக பிரியுங்கள் என்று அதற்கு மன் 1970 ஆம் அண்டு மக்கள் ஆணையை கொடுத்தார்கள் நாட்டை பிரிக்க வேண்டாம் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் 1970 ஆம் ஆண்டிலே தெட்டத்தெளிவாக சொல்லப்பட்டிருந்தது தனிநாடு கேட்பவர்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என சொல்லியிருந்தது அதன்படிதான் மக்கள் வாக்களித்திருந்தனர்.
அன்று தனிநாடு கோரிய வி.நவரட்ணம் மற்றும் சி.சுந்தரலிங்கம் ஆகியோர் கட்டுகாசை இழந்திருந்தனர். ஆனால் ஏழு வருட காலத்திற்குள் எங்கள் மக்களுடைய நிலைமை மாறியிருந்தது.
எமது மக்கள் தனி நாடு கோரியிருந்தனர். இப்போது நிலைமை மாறி ஒரே நாட்டுக்குள் திர்வை பெற்றுத்தாருங்கள் என்ற ஆணையை மக்கள் எமக்கு வழங்கியிருக்கிறார்கள். சமூக ஒப்பந்தங்களுக்கு ஒரு இணக்கப்பாடு ஏற்படுத்தப்படவேண்டும்.
சமஸ்டியைப்பற்p கூறுவதானால் இடைக்கால அறிக்கையில் முதல் இரண்டு பக்கங்களில் ஒற்றையாட்சிக்கு மாற்றீடாக ஒரு மும்மொழிவு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதிலே இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருத்தமற்றது என தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. உறுப்புரை இரண்டில் மாற்றீடாக நாடு ஒன்றாக இருக்கிறது என்பதை குறிக்கிறது.
சமஸ்டிக்கான குணாஅதியசங்கள் கொடுக்கப்படுகின்ற அதிகாரங்கள் தெளிவானதும் கொடுத்ததை திரும்ப பெற முடியாததாகவும், குறைக்கப்பட முடியாததாகவும், அதிகாரம் சம்பந்தமாக மத்திய அரசு தலையிட முடியாததாகவும் இருக்க வேண்டும், அவை இரண்டும் இந்த இடைக்கால அறிக்கையிலே உள்ளது. அத்துடன் அறவத வருடங்களுக்கு யமன்னைய சமஸ்டி ஒற்றையாட்சி என்கிற பதங்கள் இன்று மாறியுள்ளது.
ஒற்றையாட்சி என்கிற பதம் உருவானது பிரித்தானியாவில் ஒரு பாராளுமன்றத்திலிருந்ததான் ஒற்றையாட்சி உருவாகியது அனால் இன்று பிரித்தானியாவில் பல பாராளுமன்றங்கள் உள்ளது. அத்துடன் பிரிந்து போவதற்கதான உரிமையும் உள்ளது. அதே போலதான் சமஸ்டியின் விளக்கமும் மாறியுள்ளது உதாரணத்திற்கு இந்தியாவை எடுத்துக்கொள்ளலாம்.
இடைக்கால அறிக்கையின் சுபாவம் சமஸ்டிக்கு ஒத்ததாக இருக்கிறது. அண்மையிலே இலங்கை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது இலங்கை தமிழரசுக்கட்சிக்க எதிராக தொடுக்கப்பட்ட வழக்கிலே ஒற்றையாட்சி உள்ள பல நாடுகள் சமஸ்டியாக இருக்கிறது.
சமஸ்டியாக இருக்கிற பல நாடுகள் ஒற்றையாட்சி முறைமையை கொண்டுள்ளது ஆகவே இந்த சொற்பதங்களில் எந்தவிதமான அர்த்தங்களும் இல்லை என சொல்லியுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சி சமஸ்டி அடிப்படையிலான ஒரு திர்வை கேட்பது அவர்களுடைய உரித்து என இலங்கை உயர் நீதிமன்றம் சொல்லியுள்ளது. ஆகவே பெயர் முக்கியமில்லை அறிக்கையின் உள்ளடக்கம்தான் முக்கியமானது. குறிப்பிட்ட சமஸ்டி என்ற பெயரானது மக்களை தவறாக வழிநடத்தக்கூடும் என தெரிவித்தார்