ரெலோவின் கிளிநொச்சி அமைப்பாளர் தமிழர் விடுதலை கூட்டணியின் பொது சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக, குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழரசு கட்சியின் தலைவராக தற்போது ரணிலே உள்ளார். பதில் தலைவரே சம்பந்தன். கடந்த காலங்களில் பேரினவாத அரசுக்கு எதிராக நாம் போராடி வந்தோம். இன்று அவ்வாறில்லை. அதே பேரினவாத அரசே இன்று தமிழரசு கட்சியை பாதுகாத்து வருகின்றது. யாழில் தீர்க்க வேண்டிய பிரச்சினை கொழும்பில் தீர்க்கப்படும் அளவிற்கு இன்றைய அரசியல் காணப்படுகின்றது.

தமிழரசு கட்சிக்கு வாக்களித்தால் நாம் அரசுக்கு மீண்டும் அடிமையாகி விடுவோம். தமிழரசு கட்சிக்கு வாக்களித்தால் அது நமக்கு சாபக்கேடு. இன்று அரசியல் மாற்றம் ஒன்று தேவைப்படுகின்றது.

ரெலோ அமைப்பு கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்து விட்டு, மீண்டும் கொழும்பிற்கு சென்று அவர்களுடன் இணைந்தமை கவலைக்குரியதே. இது தொடர்பில் நான் அடைக்கலநாதன் உள்ளிட்டோர்க்கு தெரிவித்திருந்தேன்.

இந்தநிலையில் நான் பொது சின்னமொன்றில் போட்டியிட வேண்டும் என எண்ணி, தமிழர் விடுதலை கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்துள்ளேன் என்றார்