3 ஆயிரத்து 843 மில்லியன் ரூபா 2018 ஆம் ஆண்டிற்குரிய மூலதனச் செலவீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சபையில் அறிவித்தார்.

வடமாகாண சபையின் 112வது அமர்வு இன்று யாழ். கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் இடம்பெற்றது. அதன் போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் 2018ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றினார்.

முதலாவது வடக்கு மாகாணசபையின் ஐந்தாவதும் கடைசியுமான வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.

பாரிய செயற்றிட்டங்களை நாம் இயற்றவில்லை, பொருளாதார ரீதியாக முன்னேறவில்லை என கூறுபவர்கள் அரசியல் ரீதியாக எமக்குத் தகுந்த அதிகாரங்கள் கிடைக்கும் வரை சற்றுப் பொறுமையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன் என முதலமைச்சர் இதன்போது கூறினார்.