ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வந்த அவர்கள், மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து தமது ஆதரவை வௌிப்படுத்தியதாக, ஜனாதிபதி ஊடகப் பரிவு கூறியுள்ளது.இதன்படி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய தெரணியகல முன்னாள் பிரதேசசபை தலைவர் அனுர குருப், மற்றும் உப தலைவர் எல்.டி.விஜேவர்த்தன ஆகியோரும், ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய தெகியோவிட பிரதேசசபையின் முன்னால் உறுப்பினர் தோமஸ் சமிந்த மற்றும் அக் கட்சியின் உறுப்பினரான ஏ.வி.ஜெயரத்ன ஆகியோருமே இவ்வாறு, சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.