சிறியானி விஜேவிக்கிரமவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

மக்கள் ஐக்கிய முன்னணியில் இருந்து கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமைக்காக அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு, பொதுஜன ஐக்கிய முன்னணியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் என்ற ரீதியில் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார். கடந்த 09ஆம் திகதி வரவு செலவுத்திட்டத்துக்கு எதிராக வாக்களித்த அவர், பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும், அது அரசாங்கத்தின் சதி திட்டத்தின் பிரதிபலனாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.