வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் காலை 8 மணிக்கு ஆரம்பிப்பது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

காலை 7.30க்கு பாடசாலை ஆரம்பிக்கப்படுவதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய இது குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கந்தய்யா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். உரிய போக்குவரத்து வசதிகள் இன்மையால் கிராமப்புற மாணவர்கள் நகர் புற பாடசாலைகளுக்கு சமூகமளிப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை மற்றும் மாணவர்கள் காலை உணவு உட்கொள்ளாமல் பாடசாலைக்கு சமூகமளிக்கின்றமை உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் ஆசிரியர்களால் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்