மலேஷிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக் (Najib bin Tun Abdul Razak) நாளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை இங்கு தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இலங்கை வரும் அவர், ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உள்ளார். இதன்போது விஞ்ஞான தொழில்நுட்பம், புதிய உற்பத்திகள் என்பன தொடர்பில் இரு நாடுகளுக்கிடையில் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.