இலங்கையின் தேயிலை மற்றும் விவசாயப் பொருட்களுக்கு ரஷ்யாவினால் விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு, அந்த நாட்டுப் ஜனாதிபதியிடம் கோரவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹப்புத்தலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைகளில், ஒருவகை பூச்சியினம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையின் தேயிலை உள்ளிட்ட விவசாயப் பொருட்களுக்கு ரஷ்யாவினால் தடை விதிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.