இலங்கைக்கான சீன தூதுவர் சியான்லியாங், (லுi ஓயைடெயைபெ) தமது பதவிக்காலம் முடிவடைந்தநிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை நாடு திரும்பவுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2015 பெப்ரவரி 24ஆம் திகதி இலங்கைக்கு வந்த ஹீ ஸியாங்லியானின், கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக இலங்கைக்கான சீன தூதுவராக செயற்பட்டுள்ளார். தமது பதவிக்காலத்தில் பல்வேறு திட்டங்களை அவர் செய்து முடித்துள்ளார். ஹீ ஸியாங்லியான், இலங்கையில் மிகவும் செல்வாக்கு மிக்க சீன பிரதிநிதியாக பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது பதவிக்காலத்தில் இலங்கையின் 9 மாகாணங்களுக்கும் 25 மாவட்டங்களுக்கும் விஜயம் செய்த அவர் இலங்கையில் சீனாவுக்கான வாய்ப்புக்களை அதிகரித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

போட்சிட்டி, ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பவை தொடர்பில் இருந்த பாரிய சிக்கல்களை அவர் கலைந்துள்ளார். இந்த நிலையில், இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக மற்றும் உட்கட்டமைப்பு நிர்மாண பங்காளராகவும், நிதி மற்றும் நன்கொடைகளை வழங்கும் நாடாகவும், சீனா மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.