அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் எதிர்வரும் பெப்பிரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேர்தல்கள் திணைக்களத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்தார். இதேவேளை 248 உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியது. எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்பு மனுக்களை கையளிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். சுயேட்சை குழுக்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் கால எல்லை எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது