தமிழீழ விடுதலை புலிகளால் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத்தை தேடும் முகமாக பெகோ இயந்திரம் ஒன்றினை திருடி வந்து, கைவிடப்பட்ட முகாம் ஒன்றின் அருகில் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் நபர் ஒருவர் கிணறு வெட்டுவதற்காக பெகோ இயந்திரம் ஒன்றினை அப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார். இந் நிலையில் இரவு வேளையில் அந்த பெகோ இயந்திரத்தை அவர் விசுவமடு அதிசய விநாயகர் ஆலயம் அருகே நிறுத்தி வைத்துள் ளார். இதன்போது திருட்டு திறப்பொன்றினை பயன்படுத்தி அந்த பெகோ இயந்திரத்தை அங்கிருந்து திருடிச் சென்றுள்ள சிலர், முன்னர் விடுதலை புலிகளின் முகாம் இருந்ததாக கூறப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பெகோ இயந்திரத்தை காணாது உரிமையாளர் பொலிஸில் முறையிடவே, அது தொடர்பில் விசாரணை செய்த நிலையில் முன் னாள் விடுதலை புலி உறுப்பினரும் ஏனைய இருவரும் தங்கம் தேடி அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்கள் 23 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். விசாரணைகளை புதுக்குடியி ருப்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.