மன்னார் பேசாலை கடற்பரப்பில் காணாமல் போன கடற்தொழிலாளர்களில் ஒருவர் இராமேஸ்வரம் கடல்பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.

மன்னார் பேசாலை பகுதியில் இருந்து நேற்றுக்காலை கடற்தொழிலுக்காக சென்ற இரு கடற்தொழிலாளர்கள், வீடு திரும்பவில்லை என அவர்களது உறவினர்களால் பேசாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளான நிலையில் அவர்களில் ஒருவர் இராமேஸ்வரம் கடற்தொழிலாளர்களால் மீட்கப்பட்டு, இராமேஸ்வரம் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இருப்பினும் கடற்தொழிலுக்காக சென்றவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 23 வயதுடையவரே காணாமல் போயுள்ளார். அவரை தேடுப்பணி கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேசாலை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.