செங்கலடி மத்திய கல்லூரிக்கு அருகிலுள்ள கால்வாயிலிருந்து இன்றுகாலை சடலமொன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொம்மாந்துறை திருவள்ளூர் வீதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய சின்னத்துரை விமலநாதன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றுமாலை தனது வீட்டிலிருந்து துவிச்சக்கர வண்டியில் சென்றிருந்த நபர் வீடு திரும்பாத நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டிருந்தது. ஏறாவூர் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கூலித் தொழிலாளியான இவர் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து கடந்த மாதம் நாடு திருப்பியுள்ளார். இவர் மதுபானம் அருந்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.